Categories: tech news

அதிரடி விலை குறைப்பு.. ₹9,499-க்கு ரெட்மி 5G போன் – எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 13C 5G மாடல் அந்நிறுவனத்தின் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் 90Hz டிஸ்ப்ளேவை குறிப்பிடலாம். இந்த இரு அம்சங்கள் இருந்த போதிலும் இந்த மாடல் பட்ஜெட் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அறிமுகத்தின் போது ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் தற்போது சற்றே குறைக்கப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கூப்பன் வடிவில் வழங்கப்படும் தள்ளுபடியைத் தொடர்ந்து ரெட்மி 13C 5G மாடலுக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர அந்நிறுவனம் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 10,499 என குறைத்து இருக்கிறது. இவை இரண்டையும் சேர்க்கும் போது ரெட்மி 13C 5G விலை ரூ. 9,499 என மாறிவிடும். இதுதவிர அமேசான் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 13C 5G மாடலில் 6.74 இன்ச் டியூ-டிராப் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ 5G பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. போட்டோக்களை எடுக்க 50MP டூயல் கேமரா சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.

இத்துடன் 5G, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago