Categories: tech news

திடீர் விலை குறைப்பு.. ரெட்மி போன் வாங்க சூப்பர் சான்ஸ்

இந்திய ஆன்லைன் வலைத்தளங்களில் சமீபத்தில் தான் ஏராளமான சலுகைகள் வழங்கும் சிறப்பு விற்பனை நடந்து முடிந்தன. இவற்றில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகைகள் மற்றும் பலன்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், எவ்வித சிறப்பு விற்பனையும் இன்றி அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி போனுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.

இதனால் ரெட்மி 13C 5ஜி மாடலின் விலை இந்தியாவில் குறைந்துள்ளது. இந்திய சந்தையில் ரூ. 10,499 விலையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி 13C விலை தற்போது ரூ. 9,499 என மாறி இருக்கிறது. இந்த தள்ளுபடியை பெறுவதற்கு பயனர்கள் ரெட்மி 13C விலையின் கீழ் இடம்பெற்று இருக்கும் “Apply Rs 1000 coupon” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இத்துடன் அமேசான் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். பயனர்களுக்கு ரூ. 472.78 வட்டியில்லா மாத தவணை முறை தள்ளுபடியை பெறலாம். வங்கி பலன்களை தவிர்த்து ரெட்மி 13C வாங்கும் போது அதன் விலை ரூ. 9,499 என மாறிவிடும்.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 13C மாடலில் 6.74 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 0.08MP லென்ஸ், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி 13C ஸ்மார்ட்போன் க்லோவர் கிரீன், கிலேசியர் வைட், நேவி புளூ மற்றும் மிட்நைட் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

42 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago