tech news
கம்மி விலை, சூப்பர் டிசைன்.. புது போன் அறிமுகம் – எந்த மாடல்?
சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 13C மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரெட்மி 14C பெயரில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G81-அல்ட்ரா பிராசஸர், ARM Mali-G52 2EEMC2 GPU கொண்டிருக்கும் புதிய ரெட்மி 14C மாடலில் அதிகபட்சம் 8GB ரேம், 8GB வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை அதிகபட்சமாக 256GB-யும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் கொண்டுள்ளது.
இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
புதிய ரெட்மி 14C ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் டிரீமி பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் ஸ்டான்டர்டு பிளாக், சேஜ் கிரீன் மற்றும் வீகன் லெதர் மேட் டெக்ஸ்ச்சர் மற்றும் ஸ்டேரி புளூ-ஸ்டார் டிரெயில் டிசைன் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 119 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 9,980 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.