tech news
சைலன்ட்-ஆ வேலை பார்த்த சியோமி – புது போன் அறிமுகம்.. விலை தான் டுவிஸ்டு
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. ரெட்மி A3x என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி A3x மாடலில் 6.71 இன்ச் IPS LCD பேனல், HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, யுனிசாக் டி603 சிப்செட், மாலி G57 MP1 GPU, அதிகபட்சம் 4GB ரேம், 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா QVGA லென்ஸ், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த MIUI ஓஎஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட் வழங்கப்படும் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக் வசதி, 3.5mm ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் 5.4, வைபை, 4ஜி வோல்ட்இ, GPS போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10W சார்ஜிங் வசதி உள்ளது.
விலையை பொருத்தவரை புதிய ரெட்மி A3x ஸ்மார்ட்போனின் 3GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓஷன் கிரீன், ஆலிவ் கிரீன் மற்றும் ஸ்டேரி வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.