சியோமி நிறுவனத்தின் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் மிட்ரேன்ஜ் பிரிவில் களமிறங்கி இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 144Hz5 IPS LCD டிஸ்ப்ளே, 5080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், 64MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50i ஸ்மார்ட்போனின் விலை தற்போது குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரெட்மி K50i புதிய விலை அமேசான் மற்றும் சியோமி இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. விலை குறைப்பை அடுத்து ரெட்மி K50i ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
ரெட்மி K50i மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இதன் பேஸ் மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு / நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடியும், அமேசான் தளத்தில் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ரெட்மி அல்லது சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் லரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
ரெட்மி K50i அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i மாடலில் 6.6 இன்ச் FHD+ 144Hz ஸ்கிரீன், டால்பி விஷன், டிசி டிம்மிங், பன்ச் ஹோல் கட்அவுட், மெல்லிய பெசல்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்ப்பட்டு உள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், ARM-மாலி G610 GPU வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி/256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ரெட்மி K50i மாடலில் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 5080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி K50i மாடல் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் ரெட்மி K50i வாங்கலாமா?
இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்குவதற்கு ரெட்மி K50i ஸ்மார்ட்போன் சிறப்பான டீல் என்றே கூறலம். இதில் உள்ள டிமென்சிட்டி 8100 பிராசஸர் அசாத்திய செயல்திறன் வழங்குகிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட்நாள் முழுக்க தேவையான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் கேமிங் மற்றும் பொழுதுபோக்கின் போது அலாதியான அனுபவத்தை வழங்கும். இவை அனைத்தும் ரெட்மி K50i ஸ்மார்ட்போனினை புதிய விலையில் வாங்கிட நல்ல தேர்வு எனலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…