Connect with us

tech news

மிரட்டிவிட்ட அம்பானி.. AGM 2024-இன் அசத்தல் அறிவிப்புகள்..!

Published

on

ரிலையன்ஸ் குழுமம் சார்பில் 47 ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் ஆன்லைன் வீடியோ வடிவில் நேரலை செய்யப்பட்டது. இதில் அந்நிறுவனம் ஜியோ பிரெயின், ஜியோடிவி ஓஎஸ், ஜிவி டிி பிளஸ் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இத்துடன் ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

ஜியோபிரெயின் சேவை ஏஐ டூல்ஸ் மற்றும் பிளாட்பார்ம்களை உள்ளடக்கிய சேவை ஆகும். இது ஜெனரேடிவ் ஏஐ சேவையையும் வழங்குகிறது. இந்த சேவையின் கீழ் ஜியோ நிறுவனம் ஏஐ மாடல் உருவாக்கப்படுகிறது. எனினும், அந்த மாடல் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆஃபர் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 100GB வரை இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. பயனர்கள் இங்கு தங்களது மிகமுக்கிய தரவுகளை ஸ்டோர் செய்து கொள்ளலாம். இதில் பெரும்பாலான டிஜிட்டல் வகை தரவுகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது. இந்த சலுகை 2024 தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.

ஜியோ டிவி ஓஎஸ் மற்றும் ஜியோ டிவி பிளஸ் ரிலையன்ஸ் ஜியோவின் முற்றிலும் புதிய ஓஎஸ் ஆகும். இது ஜியோ டிவி செட் டாப் பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதில் 4K தரத்தில் HDR தரவுகள், வாய்ஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. ஜியோ டிவி பிளஸ் நேரலை டிவி பிளாட்ஃபார்ம் ஆகும். இதில் 860-க்கும் அதிக நேரலை தொலைகாட்சிகளை HD தரத்தில் பார்க்கலாம்.

ஜியோ போன்கால் ஏஐ சேவை அழைப்புகளை பதிவு செய்து அவற்றை ஜியோ கிளவுட் தளத்தில் ஸ்டோர் செய்வதற்கானது ஆகும். இதில் குரல் அழைப்புகளை எழுத்துக்களாக மாற்றுவது, மொத்த உரையாடலை சுருக்கமாக மாற்றுவது மற்றும் வேறு மொழிக்கு மாற்றுவது போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் காம்படீஷன் கமிஷன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா சேவைகளை ஒருங்கிணைக்க அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஜியோ மற்றும் டிஸ்னி என இரு நிறுவனங்கள் இடையே ரூ. 70,350 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இணைந்து உருவாகும் புதிய நிறுவனத்திற்கு நீட்டா அம்பானி தலைமை வகிப்பார்.

google news