tech news
ரூ. 1499 விலையில் சூப்பர் கேட்ஜெட் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜியோடேக் ஏர் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜியேடேக் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய ஜியோடேக் சாதனம் ஜியோதிங்ஸ் செயலியுடன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. புதிய ஜியோடேக் ஏர் மாடல் ஆப்பிள் ஃபைன்ட் மை அம்சத்திலும் இயங்கும்.
ஜியோடேக் ஏர் மாடல் மெல்லியதாக இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் சாவிகள், ஐடி கார்டுகள், வாலெட், கைப்பை, செல்லப்பிரானி என்று தவறவிடக்கூடாது என நினைக்கும் அனைத்தையும் பாதுகாக்க முடியும். இந்த சாதனம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஐஓஎஸ்-இல் வெர்ஷன் 14 மற்றும் அதன் பிறகு வெளியானவை, ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதன்பிறகு வெளியானவையுடன் ஜியோடேக் ஏர் பயன்படுத்தலாம். இதில் ப்ளூடூத் 5.3 வசதி உள்ளது. இதை கொண்டு சாதனங்களுடன் எளிதில் கனெக்ட் செய்து வயர்லெஸ் டிவைஸ் டிராக்கிங் மேற்கொள்ளலாம். இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் உள்ளது. இதை கொண்டு அதிகபட்சம் 90 முதல் 120db வரை ஒலியெழுப்பி தொலைந்து போனவற்றை கண்டுபிடிக்க முடியும்.
இந்திய சந்தையில் ஜியோடேக் ஏர் மாடலின் விலை ரூ. 2,999 என அந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை ரூ. 1499 விலையிலேயே வாங்கிட முடியும். இந்த சாதனம் புளூ, ரெட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஜியோடேக் ஏர் சாதனத்தை ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் வலைதளங்களிலும் வாங்கிட முடியும்.