Categories: tech news

₹198-க்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா.. மாஸ் காட்டிய ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி முற்றிலும் புதிய அன்லிமிட்டெட் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை குறைந்த விலையில் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

ரூ. 198 விலையில் கிடைக்கும் புதிய ஜியோ ரீசார்ஜ் செய்யும் போது பயனர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோ உள்பட பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில், இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் ஜியோ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய ரூ. 198 சலுகை அன்லிமிட்டெட் 5ஜி ரீசார்ஜ்கள் பட்டியலில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் 2GB 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இது சலுகையில் மொத்தமாக 28GB டேட்டா ஆகும். தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64Kbps ஆக குறைந்துவிடும்.

டேட்டா மட்டுமின்றி இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதோடு ஜியோ கிளவுட், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற செயலிகளுக்கு சந்தா வழங்கப்படுகிறது. எனினும், இதில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா இடம்பெறவில்லை. இந்த சலுகை 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும்.

 

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago