இந்திய டெலிகாம் சந்தையில் அதீத மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ. பயனர்களுக்கு மிக குறைந்த விலை ரிசார்ஜ் சலுகைகளை வழங்குவதில் பெயர்பெற்ற நிறுவனமாக ஜியோ விளங்குகிறது. அசத்தல் சலுகைகளை அறிவிப்பது ஒருபுறம், அடிக்கடி சலுகைகளை மாற்றியமைப்பது ஒருபுறம் என ஜியோ தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தான் தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் திட்ட பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. அதிக குடும்ப இணைப்புகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் மூலம் ஜியோ வருமானம் அதிகரிப்பதோடு, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வழி செய்யும்.
டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து, ரூ. 500 பட்ஜெட்டிற்குள் புதிதாக போஸ்ட்பெயிட் இணைப்பை பெற திட்டமிடுகின்றீர்கள் எனில், ஜியோ வழங்கும் இரண்டு ரிசார்ஜ் சலுகைகள் பற்றி அறிந்து கொள்வது நல்லது.
நாடு முழுக்க 5ஜி சேவையை கொண்டு வருவதில், ஜியோ அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜியோ சேவையில் இணையும் போது 5ஜி வெல்கம் சலுகையை பெற்றிட முடியும். தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவினை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 299 போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:
ரூ. 299 விலையில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதை கடந்த பிறகு டேட்டா கட்டணம் 1 ஜிபி-க்கு ரூ. 10 என்ற வீதத்தில் வசூலிக்கப்படும். மற்ற பலன்களை பொருத்தவரை பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகின்றன.
இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சேவைகள் வழங்கப்படுகின்றன. டெலிகாம் சந்தையின் போஸ்ட்பெயிட் பிரிவில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ரிசார்ஜ் சலுகை இது ஆகும். இவைதவிர இந்த ரிசார்ஜ் சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 399 போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:
இந்த சலுகை வழங்கும் பலன்கள் காரணமாக, வரும் ஆண்டுகளில் மிகவும் பிரபல சலுகையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் ரூ. 399 விலையில் கிடைக்கும் இந்த சலுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு குடும்பத்தார்/நண்பர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 399 ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த ரிசார்ஜ் சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்த பிறகு, டேட்டா கட்டணம் 1 ஜிபி-க்கு ரூ. 10 என்ற வீதத்தில் வசூலிக்கப்படும். ரூ. 399 ஜியோ போஸ்ட்பெயிட் இணைப்பில் பயனர்கள் அதிகபட்சம் மூன்று சிம்களை பெற முடியும். ஒவ்வொரு கூடுதல் சிம் உடன் பயனர்களுக்கு 5 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த ரிசார்ஜ் சலுகையில் பயனர்கள் பெறும் கூடுதல் சிம் ஒன்றுக்கு ரூ. 99 கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த ரிசார்ஜ் சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சேவை பலன்கள் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ரூ. 299 மற்றும் ரூ. 399 போஸ்ட்பெயிட் ரிசார்ஜ் சலுகைகள் உடன் ரிலையன்ஸ் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…