Categories: latest newstech news

அட்டகாசமான கேஷ்பேக் வசதியை கொண்டிருக்கும் ரெட்மி நோட் 12 5ஜிபோன்கள்..இதன் சிறப்பம்சங்களை காணலாம்..

ஆண்டிராய்டு போன் இல்லாத மனிதர்களை காண்பதே அரிதாகி விட்டது. மொபைலின் மூலம் மற்றவர்களிடம் பேசுவது மட்டுமல்லாமல் கேம்ஸ், வீடியோ கால், பணபரிவர்த்தனை போன்ற ஏராளமான வசதிகளையும் அனுபவிக்கின்றோம். இவ்வாறு பல அம்சங்களை கொண்ட ரெட்மி நோட்12 5ஜி தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் வசதிகளை நாம் காணலாம்.

#image_title

ரெட்மி நோட்12 5ஜி  மொபைல் போன் இந்தியாவில் கடந்த ஜனவர் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் ரூ.17999க்கு 4ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விற்கப்பட்டது. தற்போது இந்த மொபைலின் விலை ரூ. 16999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிட்ட வகை வங்கிகளுக்கு இதன் மூலம் கேஷ்பேக் சலுகைகளையும் பெற முடியும்.

qualcomm processor

அமேசான் மற்றும் எம்.ஐ(MI) இந்த வகை மொபைலை ரூ. 16999 க்கு விற்கின்றனர். மேலும் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ பொன்ற வங்கிகளின் வழியாக காசை செலுத்தினால் ரூ. 2000 தள்ளுபடியும் கிடைகின்றது. வாடிக்கையாளர்கள் எச்.டி.எஃப்.சி, EMI, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளின் மூலம் பணம் செலுத்தினாலும் ரூ. 2000 தள்ளுபடி கிடைகின்றது. மேலும் அனைத்து சியோமி போன்களுக்கும் எச்ஸ்சேஞ்ச் வசதியில் மேலும் ரூ. 2000 தள்ளுபடியும் கிடைகின்றது. ஆகமொத்தம் இந்த வசதிகளை உபயோகித்தால் ரெட்மி நோட்12 5ஜி மொபைல் போன் ரூ. 12,999க்கே கிடைகின்றன.

இதைபோலவே 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ள மொபைல் ரூ. 16999க்கும் 8ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ள போன் ரூ. 18,999க்கும் சந்தையில் கிடைகின்றன.

AMOLED screen

ரெட்மி நோட்12 5ஜியானது ஆண்டிராய்டு 12-ஐ அடிப்படையாக கொண்ட எப்ஐயூஐ 13(MIUI 13) வசதியுடன் இயங்குகிறது. மேலும் இது 6.67 இன்ச் ஃபுல் எச்டி AMOLED திரையையும் Qualcomm Snapdragon 4 Gen 1 SoC வகை ப்ராஸசரையும் கொண்டுள்ளது. மேலும் இது 48 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 13 மெகாபிக்ஸல் முன்புற செல்ஃபி சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த மொபைலானது 5000mAh பேட்டரி தன்மையையும் 33W அதிவேகமாக சார்ஜ் ஆகும் தன்மையை கொண்டிருப்பதால் நாம் ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரத்திற்கு உபயோகப்படுத்தலாம். எனவே ரெட்மி பிரியர்கள் இந்த சலுகைகளை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago