Connect with us

tech news

Reward point மெசேஜ் உங்களுக்கும் வருதா? அப்போ நீங்க ஜாக்கிரதையா இருங்க..

Published

on

சமீப காலமாக பலருக்கு உங்களுடைய கணக்கில் இருக்கும் ரிவாட் பாய்ண்டுகளை பணமாக மாற்றிக் கொள்ளவோ,  பரிசு பொருளாக மாற்றிக் கொள்ளவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்ற மெசேஜ் வந்திருக்கும். அப்படி உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதிக்கு அருகில் இருப்பவர் மணிமாறன். அவருக்கு சமீபத்தில் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் உங்களுடைய கிரெடிட் கார்டு ரிவார்ட் பாயிண்ட்டுகளை ரிடிம் செய்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மணிமாறனும் ஆர்வத்தில் அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று இருக்கிறார்.

கிரெடிட் கார்டின் லாகின் ஐடியை கேட்க அவரும் தன்னுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை போட்டு உள்ளே சென்று இருக்கிறார். பின்னர் otp வர தன்னுடைய எண்ணிற்கு வந்ததை பதிவு செய்து என்டர் செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 800 ரூபாய் ரிலையன்ஸ் ரீடெய்லில் ஷாப்பிங் செய்யப்பட்டதாக மெசேஜ் அவருக்கு வந்ததை அடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார்.

இருந்தும் தாமதிக்காமல் மணிமாறன் உடனே 1930 என்ற சைபர் எண்ணுக்கு கால் செய்து புகார் அளித்திருக்கிறார். அவர் புகாரை மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆக்சிஸ் பேங்க் மேனேஜர் மற்றும் ரிலையன்ஸ் நோடல் அதிகாரி ஆகியோருக்கு இமெயில் மூலம் இந்த விஷயத்தை புகாராக தெரிவிக்க அவர்களும் கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்பட்ட பொருளை சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மணிமாறன் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டதால் பெரிய அளவில் எந்தவித பண இழப்பையும் சந்திக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளதாக மணிமாறன் தெரிவித்திருக்கிறார். தனக்கு உதவி செய்த காவலர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தெரியாத லிங்குகள் தங்களுக்கு வரும்போது அதை பரிசோதிக்காமல் கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி தவறு நடந்து விட்டாலும் தாமதிக்காமல் சைபர் கிரைமுக்கு உடனே புகாராக தெரிவிப்பதும் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.

google news