பேட்டரி நின்னு பேசும்.. ரோல்மி ஸ்மார்ட் ரிங் அறிமுகம்

0
36

ரோல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் சார்ந்து ஏராளமான அம்சங்களை இந்த ரிங் வழங்குகிறது. புது மாடல் அந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரோல்மி R2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அமைந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் ரிங் சாதனம் டைட்டானியம் அலாய் ஷெல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது கம்ப்யூட்டர் நியூமெரிக்கல் கண்ட்ரோல் எனும் வழிமுறையை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் உள்புறம் ஹைபோ-அலர்-ஜெனிக் எபோக்ஸி டிசைன் கொண்டிருக்கிறது. இது விரலில் அணியும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தாது.

புதிய ரோல்மி R3 மாடல் 5ATM தர சான்று பெற்று இருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அதிகபட்சம் 300 மீட்டர்கள் நீரில் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் PPG, லோ பவர் Infrared எல்இடி மற்றும் ஏராளமான சென்சார்கள் உள்ளன. இவை இதய துடிப்பு, இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு என உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ரிங் வழங்கும் விவரங்களை அதற்கான செயலியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இத்துடன் ஒருவரின் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியும், அதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும் வசதியும் கொண்டுள்ளது. இதில் ஜெஸ்ட்யூர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு இசையை இயக்குவது, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, எதையேனும் வாசிக்கும் போது பக்கங்களை திருப்புவது என ஏராளமான வசதிகளை செய்கை மூலம் மேற்கொள்ளலாம். இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 60 நாட்கள் வரை ஸ்டான்ட்பை வழங்குகிறது.

விலை விவரங்கள்:

சர்வதேச சந்தையில் ரோல்மி R3 ஸ்மார்ட் ரிங் விலை 179.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், தற்போது இந்த சாதனம் 89.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7500 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 7 முதல் 12 வரை என மொத்தம் ஆறுவித அளவுகளில் கிடைக்கிறது. இது பிளாக், கோல்டு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here