Connect with us

latest news

இந்த விஷயத்தில் நாங்க தான் பெஸ்ட் – ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அசத்திய சாம்சங்!

Published

on

Samsung-Galaxy-A40

2022 ஆம் ஆண்டு எளிதில் சரிசெயக்கூடிய ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை சாம்சங் நிறுவனம் பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் சரிசெய்ய அனுமதிக்கும் அளவீடுகளில் ஆப்பிள் நிறுவனத்தை சாம்சங் அதிக புள்ளிகள் அடிப்படையில் பின்னுக்குத் தள்ளியது. இதுபற்றிய தகவல்கள் எலெக்டிரானிக்ஸ் ஹப் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஃபிக்சிட் (iFixit) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த ஸ்மார்ட்போன்களை எளிதில் சரி செய்ய முடியும் என்றும், எவற்றை சரிசெய்வது கடினம் என்றும் கணக்கிடப்பட்டது. சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் ரிப்பேர் கைடு வழிமுறைகளின் கடினத்தன்மை உள்ளிட்டவைகளை கணக்கிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 2022 ஆம் ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை எளிதில் சரிசெய்து விட முடியும் என்று தெரியவந்தது. கேலக்ஸி S22 அல்ட்ரா மாடல் இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இத்துடன் கேலக்ஸி A40 மற்றும் மோட்டோரோலா மோட்டோ G7 போன்ற மாடல்கள் முறையே இரண்டு மற்றும் முதலாவது இடங்களை பிடித்துள்ளன. கேலக்ஸி A40 மாடலினை சராசரியாக 32.6 நிமிடங்களில் சரி செய்துவிட முடியும். இதில் ஏற்படும் பிரச்சினைகளில் 42.9 சதவீதத்தை எளிதில் சரி செய்ய முடியும்.

Samsung-Galaxy-S22-Ultra

Samsung-Galaxy-S22-Ultra

கேலக்ஸி S22 அல்ட்ரா மாடலை சராசரியாக 48.1 நிமிடங்களில் சரிசெய்து விட முடியும். இவற்றில் ஏற்படும் பிரச்சினைகளில் 33.3 சதவீதத்தை எளிதில் சரிசெய்து விட முடியும். கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் சரி செய்ய கடினமானவை என்ற பட்டியலில் கூகுள் பிக்சல் 7 மாடல் இடம்பெற்றுள்ளது. இதில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய சராசரியாக 60.3 நிமிடங்கள் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 மாடலையும் எளிதில் சரிசெய்துவிட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை 58.4 நிமிடங்களில் சரிசெய்து விட முடியும். இதனை சரிசெய்வது சற்றே கடினம் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டிலேயே எளிதில் சரி செய்யக்கூடிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்டியலில் 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னணி இடங்களை பிடித்து அசத்தியது.

இந்த பிரிவில் சாம்சங் நிறுவனம் கூகுள், மோட்டோரோலா, ஆப்பிள் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளியது. சில ஆண்டுகால இடைவெளிக்கு பின் சாம்சங் மீண்டும் எளிதில் சரிசெய்யக்கூடிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் பிராண்டுகள் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news