Connect with us

latest news

பட்ஜெட் விலையில் பக்கா பண்ண சாம்சங், சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம்- எந்த மாடல்?

Published

on

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை மிட் ரேஞ்ச் விலையில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி A16 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கடந்த வாரம் தான் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. ஐரோப்பைய வெர்ஷனில் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1330 சிப்செட் கொண்டிருந்த நிலையில், இந்திய வெர்ஷன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A16 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புது சாம்சங் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6 கொண்டிருக்கும் புதிய கேலக்ஸி A16 5ஜி ஸ்மார்ட்போன் ஆறு ஓஎஸ் அப்டேட்கள், ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனிற்கு அக்டோபர் 31, 2030 ஆம் ஆண்டு வரை அப்டேட்கள் கிடைக்கும்.

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள புது சாம்சங் போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A16 5ஜி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக், கோல்டு மற்றும் லைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

google news