latest news
6 வருஷத்துக்கு தொல்ல இல்ல.. புது கேமரா.. மாஸ் காட்டும் சாம்சங் போன் – எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது கேலக்ஸி A56 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கிவிட்டன.
அந்த வகையில், புதிய கேலக்ஸி A56 ஸ்மார்ட்போனில் அதன் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டதை போன்ற கேமரா சென்சார்கள்- 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 5MP மேக்ரோ கேமரா வழங்கப்படலாம்.
செல்ஃபி எடுப்பதற்கு சற்றே பழைய 32MP சென்சாருக்கு பதிலாக முற்றிலும் புதிய 12MP சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பாக புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும்,
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் சான்டா என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் S5E8855 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 1580 சிப்செட் அல்லது எக்சைனோஸ் 1480 பிராசஸர் வழங்கப்படலாம். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் கீக்பென்ச் புள்ளி விவரங்கள் வெளியாகின,
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டிங்கில் 1341 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 3836 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. இது ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருக்கு நிகரான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராசஸர் சாம்சங் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் தொடங்கி சாம்சங் நிறுவனம் தனது அப்டேட் வழங்கும் விதிகளில் மாற்றம் செய்கிறது. இதனால், புதிய ஸ்மார்ட்போனிற்கு ஆறு ஆண்டுகள் வரை தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கப்படுவது நிச்சயமாகும். மிட் ரேஞ்ச் பிரிவில் நீண்ட காலத்திற்கு அப்டேட் விரும்புவோருக்கு புதிய கேலக்ஸி A56 மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 35,000-இல் தொடங்கி ரூ. 40,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. முந்தைய கேலக்ஸி A5x சீரிஸ் மாடல்களின் விலையும் இதே போன்று நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.