Connect with us

tech news

சாம்சங் இயர்பட்ஸ் விலை பாதியாக குறைப்பு – எந்த மாடல்?

Published

on

சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் இயர்பட்ஸ் மாடல்- கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ. இந்திய சந்தையில் ரூ. 17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ தற்போது குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அமேசான் இந்தியா வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையின் கீழ் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடலுக்கு அதிகபட்சமாக 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் கூப்பன் சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சலுகை விவரங்கள்:

இந்திய சந்தையில் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடலுக்கு அமேசான் தளத்தில் 45% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 10,949 என மாறுகிறது.

மேலும் HDFC வங்கி கார்டு பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலேயுள்ள சலுகைகளை முழுமையாக பெறும் பட்சத்தில் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ இயர்பட்ஸ்-ஐ ரூ. 9,499 விலையிலேயே வாங்கிட முடியும்.

அம்சங்கள்:

அளவில் கச்சிதமாகவும், குறைந்த எடையுடன் கிடைக்கும் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ LED ஸ்டேட்டஸ் லைட்டிங், AKG டியூனிங் மற்றும் USB C போர்ட் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது. இத்துடன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் கேலக்ஸி வியரபில் ஆப் உடன் இணைந்து செயல்படும். இதை கொண்டு ANC, ஆம்பியண்ட் , டச் கண்ட்ரோல் போன்ற வசதிகளை இயக்க அனுமதிக்கும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tech news

குறைந்த விலை ஆப்பிள் விஷன் ப்ரோ.. லீக் ஆன முக்கிய தகவல்

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் இந்த ஹெட்செட் விற்பனைக்கு வந்தது.

தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக மாறிய ஆப்பிள் விஷன் ப்ரோ ஆரம்ப விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,90,000 ஆகும். ஆப்பிள் விஷன் ப்ரோ வெளியீட்டை தொடர்ந்து, இந்த ஹெட்செட்டின் மேம்பட்ட மாடல் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகின. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் விஷன் ப்ரோ 2 ஹெட்செட் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள விஷன் ப்ரோ மாடல், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில், புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் உருவாக்கும் பணிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஹெட்செட் அதன் விலைக்கு ஏற்றவாரு சற்றே குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

குறைந்த விலை விஷன் ப்ரோ மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதியில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் நிறுவனம் ஸ்பேஷியல் கம்ப்யூட்டர் என்று அழைக்கிறது. இந்த ஹெட்செட் கொண்டு பயனர்கள் ஆக்மென்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சூழலில் செயலிகளை பயன்படுத்தி மகிழ முடியும்.

google news
Continue Reading

tech news

சைலண்ட் மோடில் போன் மிஸ்ஸாகிருச்சா… கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!

Published

on

By

நம்முடன் எப்போதும் இருக்கும் மொபைல் போன் மிஸ்ஸாகிவிட்டால், அதைத் தேடி கண்டுபிடிப்பது பெரிய தலைவலி பிடித்த வேலை. அதுவும் அந்த போன் சைலண்ட் மோடில் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது இன்னும் பெரிய சவாலான விஷயம்.

நீங்கள் பயன்படுத்துவது ஆன்ட்ராய்டு போனோ அல்லது ஐபோனோ சைலண்ட் மோடில் இருக்கும் போனை மிக எளிதாகக் கண்டுபிடிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொள்வோமா?

ஆன்ட்ராய்டு

ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவராக இருந்தால் கூகுள் டிவைஸ் மேனேஜர் (Google Device Manager) மூலம் உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.

* கம்ப்யூட்டர் உதவியோடு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக்-இன் செய்யவும்.
* android.com/devicemanager என்கிற முகவரிக்குச் சென்று உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை லாக் – இன் செய்யவும்.
* அதில் இருக்கும் `Ring’ என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் போன் சைலண்ட் மோடிலேயே இருந்தாலும், இந்த ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் முழு வால்யூமில் ரிங் அடிக்கும்.

ஐபோன்
ஐஓஎஸ்ஸை பொறுத்தவரை ஆன்ட்ராய்டு போன்களை போலவே iCloud பயன்படுத்தி போனை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

* உங்கள் போனை கண்டுபிடிக்க இன்னொரு ஐஓஎஸ் டிவைஸ் அல்லது கம்ப்யூட்டர் மூலம் iCloud கணக்கில் லாக்-இன் செய்யவும்.
* iCloud.com இணையதளத்துக்குச் சென்று `Find My iPhone’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* ’play a sound on your phone’ ஆப்ஷனை கிளிக் செய்து எளிதாக உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.

இதையும் படிங்க: `மறந்தும் பண்ணிடாதீங்க பாஸ்’ – வாட்ஸ் அப்பில் செய்யவே கூடாத 7 விஷயங்கள்!

google news
Continue Reading

tech news

மென்பொருள் பொறியாளர்களின் வேலைக்கு ஏ.ஐ. வேட்டு வைக்குமா, பில் கேட்ஸ் சொல்வது என்ன?

Published

on

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், ஒருசிலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஐ. பற்றிய கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றாலும் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிவித்தார். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் நோக்கம் ஒரு பணியை விரைந்து செய்து முடிக்க உதவுவதும், பயிற்றுநர்களை போன்று செயல்படுவது தான். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மிகமுக்கிய இடங்களில் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்யும் என்பதே இந்த தொழில்நுட்பத்தின் வியக்கவைக்கும் விஷயம். சரியாக கையாளும் போது இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாக செய்துமுடிக்க உதவிகரமாகவே இருக்கும். மென்பொருள் பொறியாளர்கள் விவகாரத்தில், வரும் ஆண்டுகளிலும் மனித பொறியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.

ஒருநாள் ஏ.ஐ. ஆட்டோமேஷன் முறை மாபெரும் வளர்ச்சி கண்டு ஏராளமான வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலை நிச்சயம் வரும். எனினும், இதுபோன்ற சூழல் இன்னும் இருபது ஆண்டுகளில் உருவாவதும் கடினம் தான். தொழிலாளர்கள் மத்தியில் ஏ.ஐ. ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கம் பற்றி தற்போதைக்கு எதையும் கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஏ.ஐ. என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்ததில் இருந்தே, அவை பற்றிய வியப்பான பார்வை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இதே போன்று அவை மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடுமோ என்ற அச்ச உணர்வும் மேலோங்கியே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், ஏ.ஐ. குறித்து பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

google news
Continue Reading

tech news

உங்க மொபைல் ஹேக் ஆயிடுச்சா… இந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாதீங்க!

Published

on

By

மொபைல் போன் இல்லாத ஒருநாளை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேநேரம், மொபைலை ஹேக் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுவது, அதன்மூலம் பண மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பேட்டரி சார்ஜ்
வழக்கத்துக்கு மாறாக உங்கள் மொபைல் போன் பேட்டரி சார்ஜ் வெகுசீக்கிரமாகவே குறைந்துகொண்டே வரும். இவ்வாறு நிகழ்ந்தால் பேக்ரவுண்டில் ஏதோ ஒரு ஆப், தேவையில்லாமல் சார்ஜை தின்றுகொண்டிருக்கிறது என்று பொருள்

ஓவர் ஹீட்

அதிகப்படியான பயன்பாடு காரணமாக போன் சில நேரங்களில் ஹீட் ஆகலாம். ஆனால், தொடர்ச்சியாக ஓவர் ஹீட் ஆகிக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு ஸ்பைவேர் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உங்கள் போன் உள்ளாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

டேட்டா பயன்பாடு

திடீரென உங்கள் போனில் டேட்டா பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கினால், தேர்டு பார்ட்டி ஆப் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்களைப் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பொருள்.

வித்தியாசமான செயல்பாடு

நீங்கள் எதுவும் செய்யாமலேயே திடீரென சில ஆப்கள் ஓப்பன் ஆவது, நீங்கள் அனுப்பாமலேயே டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது அல்லது போன் செய்வது போன்றவற்றைப் பார்த்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம்.

பாப் -அப் விளம்பரங்கள்

போனில் பிரவுஸரை நீங்கள் பயன்படுத்தாத சமயங்களிலும் திடீர் திடீரென பாப்-அப் விளம்பரங்கள் தோன்றுவதும் உங்கள் மொபைல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டும் அறிகுறிதான்.

தேவையில்லாத ஆப்-கள்
நீங்கள் டவுன்லோட் செய்யாத சில ஆப்-கள் உங்கள் போனில் தென்பட்டால் உடனே எச்சரிக்கையாகிக் கொள்ளுங்கள்..

இப்படியான சமயங்களில் உடனடியாக டேட்டாவை ஆஃப் செய்து, ஏரோபிளேன் மோடை ஆன் செய்யுங்கள். உடனடியாக போனை ரீசெட் செய்வதும், உங்கள் சிம்கார்டு ஆபரேட்டரிடம் புகார் செய்தும் இதிலிருந்து மீளலாம்.

google news
Continue Reading

tech news

ரூ. 27,999-க்கு ஒன்பிளஸ் 11R வாங்க செம டைமிங் இதுதான்!

Published

on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் – ஒன்பிளஸ் 11R தற்போது மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அமேசான் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகமானதில் இருந்து ஒன்பிளஸ் 11R இவ்வளவு குறைந்த விலையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.

ஃபிளாக்ஷிப் ரக ஒன்பிளஸ் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பட்ஜெட் ரக மாடலாக ஒன்பிளஸ் 11R அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,999 என துவங்குகிறது. இத்துடன் பல்வேறு இதர பலன்களும் வழங்கப்படுகிறது.

சலுகை விவரங்கள்:

இந்தியாவில் ரூ. 39,999 விலையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியண்டில் 8GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டது. எவ்வித வங்கி சலுகையும் இன்றி இந்த ஸ்மார்ட்போனை ரூ. 27,999-க்கு வாங்கிட முடியும்.

இது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் விலையை விட ரூ. 8000 குறைவு ஆகும். ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 35,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் டி.பி.எஸ். வங்கி கிரெடிட் கார்டு மூலம் மாத தவணை பெறும் பட்சத்தில் ரூ. 1500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 16GB ரேம், 256GB மெமரி மாடல் ரூ. 33,999 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் வலைதளத்தில் இதன் விலை ரூ. 44,999 ஆகும்.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போன் சோனிக் பிளாக், கேலக்டிக் சில்வர் மற்றும் சோலார் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 11R மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 6.74 இன்ச் ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 90W சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

google news
Continue Reading

Trending