samsung galaxy f55 5g
என்னதான் சைனீஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பம்சங்களை அள்ளித் தெளித்து புதுப்புது மாடல்களை இந்திய சந்தையில் கொட்டினாலும் பெரிதும் மாற்றம் செய்யாமல் பியூச்சர்கள் இல்மல் வெளியாகும் samsung ஃபோன்களுக்கு என்றுமே தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் நான் வாங்குனா சாம்சங் மொபைல் தான் வாங்குவேன் என்று அட்டம்பிடிக்கும் சாம்சங் ரசிகர்களுக்கு சாம்சங் f55 5g மொபைல் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த மொபைல் அறிமுகமான போது 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி கொண்ட மாடல் மார்க்கெட் விலை 26,999 ஆக இருந்தது மேலும் 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி வேரியண்ட் 29,999 12 ஜிபி ரேம்+ 256 ஜிபி வேரியன்ட் 32,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.
samsung galaxy f55 5g
தற்போது இந்த மூன்று மொபைல்களும் ஆஃபர் விலையில் கிடைக்கிறது 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி வேரியண்ட் 16,750 ரூபாய்க்கு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. மேலும் பேங்க் ஆபரை பயன்படுத்தினால் 16,000 ரூபாய்க்கு கூட பெற்றுக் கொள்ளலாம். இவ்வளவு சீப்பாக கிடைக்கும் இந்த மொபைலில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி f55 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் அமலோட் 120 ஹெச் ரெப்ரஸ்ரேட் உடன் வருகிறது. ஸ்னாப் டிராகன் 7 ஜென் 1 என்ற சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமராவுடன் வருகிறது. இது போக 2 எம்பி டெத் கேமராவும் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொறுத்த வரை 50 எம்பி உடன் வருகிறது.
இதில் 5000 mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதையும் கொண்டுள்ளது. மேலும் ஐபி 67 தண்ணீர் மற்றும் தூசு தடுப்பு சான்றிதழ் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓ எஸ் ஒன் யூஐ 6.1 கொண்டு வருகிறது. இதற்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட் ஐந்து வருட பாதுகாப்பு அப்டேட்டும் கொடுக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…