Connect with us

tech news

பேட்டரி நின்னு பேசும்.. சாம்சங் 5ஜி போன் அறிமுகம்

Published

on

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M34 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய கேலக்ஸி M35 5ஜி போனில் 6.6 இன்ச் FHD+120Hz Super AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் நாட்ச் பகுதியில் 13MP பிரைமரி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1380 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் வேப்பர் சேம்பர் கூலிங் வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6.1 ஓஎஸ் கொண்டிருக்கும் புது கேலக்ஸி ஸ்மார்ட்போன் நீண்ட கால அப்டேட் பெறும். இதற்கு நான்கு ஓஎஸ் அப்கிரேடுகளும், ஐந்து ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக சாம்சங் தெரிவித்துள்ளது. மற்றபடி, இதில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது.

கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W சார்ஜிங் வசதி உள்ளது. எனினும், இந்த மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது.

இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் புளூ, லைட் புளூ மற்றும் கிரே என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

விலை விவரங்கள்:

கேலக்ஸி M35 5ஜி 6GB ரேம், 128GB மெமரி ரூ. 19,999
கேலக்ஸி M35 5ஜி 8GB ரேம், 256GB மெமரி ரூ. 21,499
கேலக்ஸி M35 5ஜி 8GB ரேம், 256GB மெமரி ரூ. 24,499

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் பிரைம் டே விற்பனையின் போது விற்பனைக்கு கிடைக்கும். இதுதவிர சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

google news