latest news
நீண்ட கால எதிர்பார்ப்பு.. சைலன்ட் மோடில் சாம்சங் பார்த்த வேலை..!
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் புதிய வேரியண்ட் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S21 FE ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட்-இன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி S21 FE அம்சங்கள் :
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்டில் சாம்சங் எக்சைனோஸ் பிராசஸருக்கு மாற்றாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.0, என்.எஃப்.சி., IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, வயர்லெஸ் மற்றும் ரிவிர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7.9mm அளவு தடிமனாகவும், 1777 கிராம் எடை கொண்டிருக்கிறது.
இதுதவிர சாம்சங் நிறுவனம், ஜூலை 26 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி Z ஃபோல்டு 5, கேலக்ஸி Z ஃப்ளிப் 5, கேலக்ஸி டேப் S9 டேப்லெட், கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.