latest news
கேலக்ஸி S சீரிஸ் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் விலை குறைப்பு – சாம்சங் அறிவிப்பு!
சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை கேலக்ஸி S சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் 2022 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்த கேலக்ஸி S22 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு தற்போது அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ரூ. 72 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய விலை விவரங்கள் :
தற்போதைய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து இந்த ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் கேலக்ஸி S22 விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று மாறுகிறது. இதுதவிர வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கேஷ்பேக் தொகையையும் சேர்க்கும் போது இந்த பயனர்கள் முற்றிலும் புதிய கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனினை ரூ. 54 ஆயிரத்து 999 என்று மாறி விடுகிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன்: போரா பர்பில், கிரீன், ஃபேன்டம் பிளாக், ஃபேன்டம் வைட் மற்றும் பின்க் கோல்டு என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி S22 அம்சங்கள் :
- 6.1 இன்ச் Full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
- டூயல் சிம் ஸ்லாட் (நானோ)
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.1
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 8 ஜிபி ரேம்
- 256 ஜிபி மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
- 10MP டெலிஃபோட்டோ கேமரா
- 10MP செல்ஃபி கேமரா
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி
- IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்