Categories: tech news

சாம்சங் போனுக்கு ரூ. 10,000 விலை குறைப்பு – அமேசான் அதிரடி

அமேசான் வலைதளத்தில் பிரைம் டே 2024 விற்பனை ஜூலை 20 ஆம் துவங்க இருக்கிறது. விற்பனைக்கு முன்பே அமேசான் தளத்தில் வழங்கப்பட உள்ள சலுகை மற்றும் தள்ளுபடி பற்றிய விவரங்கள் டீசர் வடிவில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த முறை அமேசான் பிரைம் டே விற்பனை இரண்டு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட இருக்கும் சலுகை அறிவிக்கப்பட்டு விட்டது. சாம்சங்-இன் ஃபிளாக்ஷிப் ரக மாடலான கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

அமேசான் தகவல்களின் படி கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 74,999 விலையில் வாங்கிட முடியும். இது கேல்கஸி S23 அல்ட்ரா பேஸ் வேரியண்டிற்கானது என்று கூறப்படுகிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 84,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், சிறப்பு விற்பனையின் போது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலை பயனர்கள் ரூ. 10,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ரூ. 1,04,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல்- கிரீம், கிரீன் மற்றும் ஃபேண்டம் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago