Categories: tech news

என்னப்பா இப்படி குறைச்சிட்டீங்க? Samsung மாஸ்..!

இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுதந்திர தின சலுகையாக குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

விலை குறைப்பின் படி கேலக்ஸி S24 மாடலுக்கு ரூ. 12,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுதந்திர தின சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 62,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடலுக்கானது ஆகும்.

இத்துடன் பயனர்கள் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெற முடியும். இதில் மாதம் ரூ. 5,666 செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புது சலுகை குறித்து சாம்சங் நிறுவன வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இந்த சலுகையின் படி கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் 128GB மெமரி மாடல் மட்டுமின்றி 256GB மற்றும் 512GB மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 77,999 மற்றும் ரூ. 89,999-இல் இருந்து ரூ. 67,999 மற்றும் ரூ. 79,999 என மாறி இருக்கிறது.

அமேசான் வலைதளத்தில் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 56,000 என்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 62,000 என்றும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும். இரு வலைதளங்களிலும் சிறப்பு சலுகை மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. இவை எப்போது வரை வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S24 மாடலில் 6.2 இன்ச் Full HD+ Dynamic AMOLED 2X ஸ்கிரீன், 120GHz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃபார் கேலக்ஸி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

IP68 தர வாட்டர் ரெசிஸ்ட் வசதி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி, 25W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 15W வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் போன்ற வசதிகள் உள்ளன.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago