Connect with us

latest news

அடடா..இவ்வளவு வெரைட்டியா!..ஆமாங்க.. வந்துருச்சு சாம்சங் கேகக்ஸி S9 சீரிஸ் டேப்லெட்கள்..

Published

on

samsung galaxy s9 series

மொபைல்கள், டேப்லெட்டுகள் பெருகிவிட்ட நிலையில் பல வித சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகின்றன. பொதுவாக டேப்லெட்டுகள் என்றால் அனைவரும் விரும்புவது சாம்சங் டேப்லெட்டுகளைதான். தற்போது சாம்சங் நிறுவனம் தனது Tab S9 சீரிஸை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Samsung Galaxy Tab S9 Ultra, Galaxy Tab S9+ மற்றும் Galaxy Tab S9 என்ற மூன்று வகைகளில் தனது டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy Tab S9 Ultra:

samsung galaxy s9 ultra

samsung galaxy s9 ultra

  • Samsung Galaxy Tab S9 Ultra ஆனது 12ஜிபி RAM 256/512ஜிபி இண்டெர்னெல் ஸ்டோராஜ் மற்றும் 16ஜிபி RAM மற்றும் 1TB இண்டெர்னெல் ஸ்டோரேஜ் என மூன்று வகைகளில் நமக்கு கிடைக்கின்றது.
  • இதன் பின்புறம் 13MP வைட் ஆங்கிள் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் முன்புறம் 12MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
  • Samsung Galaxy Tab S9 Ultra 14.6இன்ச் AMOLED திரையையும் 120Hz Refresh rate-ஐயும் கொண்டுள்ளது.
  • மேலும் இது 11,200mAh பேட்டரி தன்மையையும் 45வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையையும் கொண்டிருப்பதால் இதன் பேட்டரி நீடித்து உழைக்கும். மேலும் இதன் எடை 732கிராம் ஆகும்.
  • விலை: ரூ.1,08,999

Galaxy Tab S9+:

samsung galxy s9+

samsung galaxy s9+

  • Galaxy Tab S9+ ஆனது 12ஜிபி RAM 256/512ஜிபி இண்டெர்னெல் ஸ்டோராஜ் என இரு வகைகளின் கிடைகின்றது.
  • இதன் பின்புறத்திலும் 13MP வைட் ஆங்கிள் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் முன்புறத்தில் 12MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
  • இது 12.4இன்ச் AMOLED திரையையும் 120Hz Refresh  Rateஐயும் கொண்டுள்ளது.
  • இதன் நீடித்து உழைக்கும் 10,090mAh பேட்டரி அமைப்பானது இதற்கு கூடுதல் வசதியினை அளிக்கிறது. இதன் எடை 586கிராம் மட்டுமே.
  • விலை:ரூ.90,999

Galaxy Tab S9:

samsung galaxy s9

samsung galaxy s9

  • Galaxy Tab S9 ஆனது நமக்கு இரு வகைகளில் கிடைக்கின்றது. 8/12ஜிபி RAM மற்றும் 128/512ஜிபி இண்டெர்னெல் ஸ்டோராஜுடன் நமக்கு இரு வகைகளில் கிடைகின்றது.
  • இதன் பின்புறம் 13MP கேமராவும் முன்புறத்தில் 12MP Ultra wide angel lensயும் உள்ளது.
  • இது 11இன்ச் AMOLED திரையையும் 12Hz Refresh rateஐயும் கொண்டுள்ளது.
  • மேலும் Galaxy Tab S9 ஆனது 8400mAh பேட்டரி தன்மையை கொண்டுள்ளதால் இதன் பேட்டரி நமக்கு நன்றாக உழைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 498கிராம் ஆகும்.
  • விலை: ரூ.72,999.

இந்த மூன்று வகையுமே கிட்டதட்ட பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒவ்வொன்றின் விலைக்கு ஏற்ப அதன் பேட்டரி தன்மை மற்றும் இதர வசதிகளும் மாறுகின்றன. எனவே சாம்சங் பிரியராக நீங்கள் இருந்தால் இந்த டேப்லெட்டுகளை வாங்கலாம்.

google news