Connect with us

tech news

சாம்சங்-இன் புது Foldable சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் உள்ளது. இத்துடன் அதிகபட்சம் 12GB வரையிலான ரேம், 1TB வரையிலான மெமரி உள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 5-ம் தலைமுறை மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் ஆர்மர் அலுமினியம் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 4000mAh பேட்டரி உள்ளது. இது முந்தைய மாடலில் உள்ளதை விட அளவில் பெரியது ஆகும்.

இதேபோன்று புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் அளவில் பெரிய வேப்பர் சாம்பரும், கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் முதல்முறையாக வேப்பர் சாம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தடுக்கும். இதுதவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் AI சார்ந்து பல்வேறு அம்சங்களை வழங்கி உள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 புளூ, மின்ட், சில்வர் ஷேடோ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 1,09,999 என்றும் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 1,21,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கேலக்ஸி Z போல்டு 6 ஸ்மார்ட்போன் சில்வர் ஷேடோ, நேவி மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 1,64,999 என்றும் 12GB ரேம், 512GB மெமரி மாடல் ரூ. 1,76,999 என்றும் 12GB ரேம், 1TB மெமரி கொண்ட சில்வர் ஷேடோ நிற விலை ரூ. 2,00,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

google news