Categories: tech news

ஒரே நாளில் 5 சாதனங்களை விற்பனைக்கு கொண்டுவந்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி Z சீரிஸ் மாடல்கள், வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. சர்வதேச அறிமுகத்தை தொடர்ந்து இவை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டன. கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி வாட்ச் 7 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 உள்ளிட்ட சாதனங்கள் இதில் அடங்கும்.

புதிய கேலக்ஸி சாதனங்களுக்கான முன்பதிவுகள் நடைபெற்று வந்தது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், இவற்றின் விற்பனை தற்போது துவங்கியுள்ளது. இவை சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவில் கேலக்ஸி மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு முன்பைவிட 40 சதவீதம் வரை அதிக வரவேற்பு கிடைத்ததாக சாம்சங் தெரிவித்துள்ளது.

விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 6 விலை ரூ. 1,09,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,21,999 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6 விலை ரூ. 1,64,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,00,999 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 விலை ரூ. 29,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36,999 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா விலை ரூ. 59,999 என துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 விலை ரூ. 14,999 ஆகும்.

புதிய சாதனங்களில் சாம்சங் தனது கேலக்ஸி வாட்ச் 7 மாடலுக்கு ரூ. 5000 கேஷ்பேக் வழங்குகிறது. இதே போன்று கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மாடலுக்கு ரூ. 6000 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 மாடலுக்கு ரூ. 3000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago