Connect with us

latest news

சாம்சங் வேற லெவல் திட்டம்.. குறைந்த விலை ஃபோல்டபில் போன்..!

Published

on

Samsung-Galaxy-Z-Fold-4

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் சிறப்பான டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன், சற்றே குறைந்த எடை போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. எனினும், இதில் எஸ் பென் வசதி வழங்கப்படவில்லை.

ஒரே ஆண்டில் சாம்சங் அறிமுகம் செய்த இரண்டாவது ஃபோல்டபில் போன் மாடல் இது ஆகும். மேலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் கொரியா தவிர சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதோடு சாம்சங் குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது.

குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போனிற்கு பதிலாக சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பயனர்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வாங்க கூடுதல் ஆப்ஷனை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எஸ் பென் இல்லாமல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு ஸ்பெஷல் எடிஷன் மாடல் தேவைப்படும். இதே போன்று சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரிய சந்தையில் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,70,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 16GB ரேம், 512GB மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் பிளாக் ஷேடோ நிறத்தில் கிடைக்கிறது.

google news