சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் சாம்சங் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை வெளியாகி உள்ளன. அந்த வரிசையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் எத்தனை நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
பிரபல டிப்ஸ்டரான ஐஸ் யூனிவர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மொத்தத்தில் நான்கு நிறங்கள்- பிளாக், கிரீன், புளூ மற்றும் டைட்டானியம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் பிளாக் மற்றும் டைட்டானியம் நிறங்கள் தற்போதைய S24 அல்ட்ரா மாடலில் இருப்பதை போன்றே காட்சியளிக்கும். மாறாக புளூ மற்றும் கிரீன் நிறங்கள் முற்றிலும் புதிய ஆப்ஷன்கள் ஆகும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S25 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட், அதிகபட்சம் 16GB ரேம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படலாம். பேட்டரியை பொருத்தவரை புதிய S25 அல்ட்ரா மாடலிலும் 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…