Connect with us

latest news

சீரற்ற இதய துடிப்பினை காட்டும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6..இதில் என்ன சிறப்பம்சங்கள் இருக்குனு பார்க்கலாம்..

Published

on

samsung galaxy watch 6

உலகின் தலைசிறந்த பொருட்களை வழங்குவதில் சாம்சங் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் மொபைல், லேப்டாப், நோட்புக், வாட்ச் என பல புதுவகை சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வரிசையில் தற்போது கேலக்ஸி வாட்ச் 6-ஐ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை சந்தையில் வரும் ஜூலை மாதம் வெளியிடலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

samsung products

samsung products

இந்த வாட்சானது புது வகையான சுகாதார அம்சங்களுடன் வெளியாக உள்ளது. சாம்சங் வாட்ச் 6 சீரிஸ் இரு வித்மான மாடல்களுடன் வெளியாக உள்ளது. இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த வாட்சினை அணியும் பொழுது நமது இதய துடிப்பின் வீதம் சீரற்று இருந்தால் அதனை நமக்கு தெரியப்படுத்தும். மேலும் இந்த வாட்சானது தொடர்ச்சியான இரத்த கொதிப்பு, இத துடிப்பு, ECG என அனைத்தையுமே கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

samsung galaxy watch6

samsung galaxy watch6

இது உபயோகிப்பாளர்களுக்கு அவர்களின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது. இதன் (Irregular Heart Rythm Notification)IHRN வசதி நமது இதயத்தின் துடிப்பினை கண்டறிகிறது. இந்த புதுவகை வசதி அமெரிக்கா, தென்கொரியா மற்றும் 11 நாடுகளில் உள்ள சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *