சாம்சங் நிறுவனமும் மூன்றாக மடித்துக் கொள்ளும் புதுவகை ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹூவாய் நிறுவனம் இதே போன்ற ஸ்மார்ட்போன் மாடலை சந்தையில் வெளியிட்டது. இதன் விலை சீன சந்தையில், இந்திய மதிப்பில் ரூ. 2,37,000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், ஹூவாய் போன்றே சாம்சங் நிறுவனமும் விரைவில் தனது மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போன்று சியோமி, ஹானர் மற்றும் ஒப்போ நிறுவனங்களும் மூன்றாக மடிக்கும் திறன் கொண்ட புதுவகை ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக கொரிய சந்தைகளில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்ட்ரி லெவல் கிளாம்ஷெல் டிசைன் ஃபோல்டபில் போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதே போன்று மூன்றாக மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு மாடல்களும் அடுத்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.
சாம்சங் டிஸ்ப்ளே கூட்டு நிறுவனங்கள் புதிய மூன்றாக மடிக்கும் ஸ்மார்ட்போனின் வணிக திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், வெளியீடு தொடர்பான முடிவை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் எம்.எக்ஸ். பிரிவு தலைவர் தான் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…