மத்திய அமைச்சரவை ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தை விரிவுபடுத்தி, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அவர்களது வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவ காப்பீடு வசதியை வழங்க இருக்கிறது. இது இந்தியாவில் உள்ள பொது சுகாதாரத் துறையில் பெருமளவு மாற்றமாக பார்க்கப்படுகிறது.
மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு அதிக செலவாவதை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் தங்களின் நோய்ச் சுமையை நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்தியாவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
தற்போது, இந்தத் திட்டம் வருமானம் அடிப்படையிலும் தகுதியான குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருடாந்திர காப்பீட்டை வழங்குகிறது. பொருளாதார ரீதியாக மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவீதத்தினர், அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது இத்திட்டத்தின் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான வருடாந்திர காப்பீடு வழங்கப்படும். இந்த வயதிற்குட்பட்ட சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலாக 6 கோடி பேர் இதன் மூலம் பயனடைவர். சேவை விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு PM-JAY இன் கீழ் புதிய அட்டை வழங்கப்படும்.
70 வயதை கடந்த முதியவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தில் இருந்து பயனடைய முடியுமா?
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் (பகிரப்பட்ட) டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறுபவர்கள் ஏற்கனவே உள்ள திட்டத்திலோ அல்லது AB PM திட்டம் என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தனியார் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பவர்கள், பலன்களைப் பெறலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…