latest news
ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?
இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில், இந்தத் திட்டத்தில் பொது மக்களுக்கு பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டன,
மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதோடு, அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறவும் ரேஷன் அட்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரேஷன் அட்டை இல்லாதவர்கள் அரசு திட்டங்களில் பயன்பெற முடியாது. ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் ரேஷன் திட்ட பலன்கள் கிடைக்கும். இதற்காக ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (செப்டம்பர் 30) நிறைவடைந்தது.
ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. அப்டேட் செய்யதாவர்களுக்கு ரேஷன் திட்ட பலன்கள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இவ்வாறு செய்ய தவறியவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனினும், அரசு தரப்பில் பொது மக்கள் ரேஷன் கார்டுடன் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொது மக்கள் கவலையின்றி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் எவ்வித தடையும் இன்றி ரேஷன் திட்ட பலன்களை தொடர்ந்து பெற முடியும்.