சோனி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. சோனி பிரேவியா 3 சீரிசை தொடர்ந்து புதிதாக பிரேவியா 8 ஸ்மார்ட் டிவி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் XR OLED மோஷன் தொழில்நுட்பம், மேம்பட்ட ஏஐ பிராசஸர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் என பல்வேறு உயர் ரக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய ஸ்மார்ட் டிவியில் XR OLED மோஷன் தொழில்நுட்பம் மற்றும் XR 4K அப்-ஸ்கேலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த காட்சி அனுபவத்தை உறுதிப்படுத்தும். இத்துடன் காக்னிடிவ் பிராசஸர் XR வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதிகள் டிவி பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக மாற்றும்.
இந்த ஸ்மார்ட் டிவியுடன் IMAX வசதி வழங்கப்படுகிறது. முதல் பத்து மாதங்களுக்கு இலவசமாக IMAX படங்களை கண்டுகளிக்க முடியும். அதன்பிறகு அடுத்த 24 மாதங்களுக்கு திரைப்படங்களை 4K Blu-Ray தரத்தில் ஸ்டிரீமிங் செய்து பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் சோனி பிக்சர்ஸ் கோர் வழங்கப்பட்டுள்ளது. இது சோனி பிக்சர்ஸ் திரைப்படங்களை கண்டுகளிக்கும் வசதியை வழங்குகிறது.
புதிய பிரேவியா 8 சீரிஸ் மாடல்களை கேமிங்கிற்கு ஏற்றவாரு மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் ஆட்டோ HDR டோன் மேப்பிங் இடம்பெற்று இருக்கிறது. இது காட்சிகளின் அடிப்படையில் தானாக HDR ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளும். இத்துடன் 4K/120fps, வேரியபில் ரிப்ரெஷ் ரேட், ஆட்டோ லோ லேடன்சி மோட் போன்ற வசதிகள் உள்ளன. இவை கேமிங் அனுபவத்தை சிறப்பாக மாற்றும்.
இந்த ஸ்மார்ட் டிவிக்களில் கூகுள் டிவி ஓஎஸ் உள்ளது. இதில் 400000-க்கும் அதிக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களை இயக்கும் வசதி உள்ளது. இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய சோனி பிரேவியா 8 சீரிஸ் டிவி மாடல்கள் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2,19,990 மற்றும் ரூ. 3,14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு மாடல்களும் ஆனலைன் மற்றும் ஆஃப்லைனில் சோனி சென்டர் மற்றும் முன்னணி மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவற்றுடன் இரண்டு ஆண்டுகளுககு வாரண்டியும் வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…