Connect with us

tech news

எங்கும் கொண்டு போலாம்.. மாஸ் காட்டும் சோனி கன்சோல்..!

Published

on

சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் போர்டல் ரிமோட் பிளேயர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கையடக்க சாதனமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் வைபை மூலம் கன்சோல் தரத்தில் கேமிங் செய்யலாம்.

புதிய பிளேஸ்டேஷன் போர்டல் ரிமோட் பிளேயர் கொண்டு பிஎஸ்5 (பிளே ஸ்டேஷன் 5) கேம்களை வைவை இணைப்பின் மூலம் விளையாட முடியும். இதன் மூலம் டிவி இல்லாமல் கேமிங் செய்யலாம். இந்த சாதனம் உங்களது கேமிங் கலெக்ஷனை இயக்கி, அதில் உள்ள கேம்களை விளையாட அனுமதிக்கிறது.

இந்த சாதனம் பயனரின் பிளே ஸ்டேஷன் 5 உடன் அதிவேகமாக இணைந்து கொள்ளும். இதனை ஒற்றை பட்டன் க்ளிக் செய்து ஆன் செய்யலாம். இதில் 8 இன்ச் LCD ஸ்கிரீன், Full HD ரெசல்யூஷன், அதிகபட்சம் 60fps வேகத்தில் சீரான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

இதுதவிர வழக்கமான டூயல் சென்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலர் வழங்கும் அனைத்து அனுபவங்களையும் இந்த சாதனம் வழங்கும். ஹாப்டிக் ஃபீட்பேக் (கேம்களுக்கு ஏற்ற வகையிலான அதிர்வுகள்) அடாப்டிவ் டிரிகர்கள் என முழுமையான கேமிங் அனுபவத்தை புதிய சாதனம் உறுதிப்படுத்தும்.

இந்திய சந்தையில் புதிய பிளேஸ்டேஷன் போர்டல் ரிமோட் பிளேயர் விலை ரூ. 18,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (ஆகஸ்ட் 3) துவங்குகிறது. விற்பனை சோனி சென்டர்கள், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்கள், க்ரோமா, ரிலையன்ஸ், விஜய் சேல்ஸ், ப்லின்க்இட் என விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

google news