latest news
ரியல் லைஃப்ல இத இனி செய்ய மாட்டேன்…மாணவருக்கு ரிஸ்க் கொடுத்த ரீல்ஸ்…
ஆன்ட்ராயிட் மொபைல்களின் ஆதீக்கம் உலகம் முழுவதும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. யாராவது ஒருவர் தனது மொபைலை கையில் வைத்து கொண்டு செல்பி எடுப்பது,வீடியோ ஷீட் செய்வது என ஒரு நாளில் ஒரு முறையாவது இந்த காட்சிகளை சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ பார்க்காமல் இருக்க முடியாது.
தங்களது போட்டோ, வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்து, அதை லைக் செய்ய எத்தனை இருக்கிறார்கள் என்பதை ஆராயவே ஒரு கூட்டம் இது போன்ற வீடியோக்கள் மீது அதிக கவனம் செலுத்தியும் வருகிறது.
அதிலும் பலர் இப்போது சோஷியல் மீடியா ரீல்சுக்காக செய்யும் சில காரியங்கள் விபரீத மான முடிவுகளை சந்திக்க வைத்து வருகிறது.
ஆனாலும் லைக்குகளுக்காகவும், ஷேர்களுக்காகவும் தங்களது பாதுகாப்பை பற்றி மட்டுமல்லாது பிறரின் நலன்களை பாதிக்கும், அச்சுறுத்தல் தரும் செயல்களைச் செய்து வருவது தொடர்பான செய்திகள் வந்தடைவதும் வழக்கமாகி வருகிறதிருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ரீல்சுக்காக போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்த இடத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பல்ஸர் பைக்கை ஓட்டிச் சென்று, அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ரீல்சுக்காக வலைதளங்களில் அப்லோடு செய்திருக்கிறார்.
பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ஓட்டிய அம்மாணவரை கைது செய்த திருச்சி காவல் துறையினர் அவர்களது பாணியில் அறிவுரை வழங்கியுள்ளார்கள். காவல் துறையினரின் அறிவுரை மாணவரின் மனதில் நன்கு பதிந்ததையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரியும், ரீல்ஸ் லைக், ஷேர்களுக்காக யாரும் இது போல நடந்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.