Connect with us

tech news

சுந்தர் பிச்சைக்கு கவுரவ டாக்டர் பட்டம் – வாங்கியதும் என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழக பூர்விகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். கூகுள், ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு கராக்பூர் ஐஐடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.

சுந்தர் பிச்சை மட்டுமின்றி அவரது மனைவிக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி கராக்பூரின் ஆல்மா மேட்டர் சார்பில் சுந்தர் பிச்சை மற்றும் அவரது மனைவி அஞ்சலி பிச்சைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது குறித்த தகவலை சுந்தர் பிச்சை இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு அஞ்சலி பிச்சை ஐஐடி கராக்பூரில் இரசாயன பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து தகவலுடன் சுந்தர் பிச்சை புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான பதிவில், “கடந்த வாரம் ஐஐடி கராக்பூரின் ஆல்மா மேட்டர் இடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெறும் வாய்ப்பை பெற்றது நன்றியுள்ளவன் ஆனேன். நான் டாக்டர் பட்டம் பெறுவேன் என்று எனது பெற்றோர் அதிகம் நம்பினர். கவுரவ டாக்டர் பட்டமும் இந்த எண்ணிக்கையில் சேர்ந்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.”

“ஐஐடி-யில் தொழில்நுட்பம் பயின்றது நான் கூகுள் வரை செல்வதற்கான பாதையை அமைத்ததோடு, பலர் தொழில்நுட்பத்தை இயக்க உதவியது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஐஐடி-யின் பங்கு மிக முக்கியமானது. அங்கு நான் செலவிட்ட தருணங்களுக்காக எப்போதும் நன்றியுடன் இருப்பேன்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

google news