google AI
சாட்ஜிபிடி அறிமுகம் AI உலகில் மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுவந்தது. டெக் உலகில் பெரும்பாலான முக்கிய தருணங்களை உருவாக்கியிருக்கும் கூகுள், இந்த AI மொமண்டை மிஸ் செய்தது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மனம் திறந்திருக்கிறார்
Google AI
அமெரிக்காவில் நடைபெற்ற சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர டெக் நிகழ்வான ட்ரீம்ஃபோர்ஸ் நிகழ்ச்சியில் சுந்தர்பிச்சை கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை கூறுகையில், `சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, கூகுள் மிகவும் சக்திவாய்ந்த சாட்பாட்களை வடிவமைத்து விட்டது. அதுவும் ஒரு சாட்பாட் தான்.
ஆனால், அதை வடிவமைத்த கூகுள் என்ஜினீயர் அந்த சாட்பாட், ஒரு கட்டத்தில் தாமாக சிந்திக்கும் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனைப் பெறக் கூடும் என்று கருதினார். இப்படி நடக்க எந்தவித வாய்ப்பும் அப்போது இல்லை என்றாலும், நாங்கள் உருவாக்கிய அந்த சாட்பாட் ரொம்பவும் அட்வான்ஸ்டாக இருந்தது.
அந்தவகையில் OpenAI-யின் முயற்சி பாராட்டத்தக்கது. அவர்கள், இதை மக்கள் முன்னிலையில் கொண்டு சென்றார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2006-ம் ஆண்டு வீடியோ சர்ச் குறித்து கூகுளில் இருந்த நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, யூடியூபின் ஐடியா விதையாக எங்கிருந்தோ வந்து விழுந்தது.
அதுவே ஃபேஸ்புக்கில் நீங்கள் இருக்கும்போது, உங்கள் ஃபீடில் இருக்கும் போட்டோக்கள் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பதை நினைக்கையில், இன்ஸ்டாகிராம் ஐடியா வந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். AI-யைப் பொறுத்தவரையில் அதற்கான ரோடுமேப்பை கூகுள் வகுத்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறது.
கூகுள் ஜெமினியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். Google Brain மற்றும் Google DeepMind-ஐ செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். ஜெமினி 2.5 மக்கள் பயன்பாட்டில் இருக்கையில், ஜெமினி 3.0 வேலைகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…