Connect with us

latest news

50 நாட்களாக விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்… பூமிக்கு திரும்புவது எப்போது?

Published

on

போயிங் விமானத்தில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க வீரர் புட்ச் வில்மோர் 50 நாட்களாக சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் பூமிக்கு திரும்ப இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம். இதற்கு விண்வெளி வீரர்கள் அடிக்கடி சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் போயிங் விண்கலம் மூலம் இந்திய வம்சாவடி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர். 

போயிங் நிறுவனம் இதற்காக ஸ்டார் லைனர் என்னும் விண்கலத்தினை உருவாக்கியது. இதில்  ஜூன் 5ந் தேதி இருவரும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்றனர். இரண்டு நாட்கள் பயணம் செய்து ஜூன் 7ந் தேதி சென்றனர். ஒரு வாரம் கழித்து ஜூன் 13ந் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்தது.

ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருப்பதால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாதமும் அவர்கள் திரும்ப முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் நாடு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் ஷிப் விண்வெளி வீரர்கள் சிலரை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து வர இருக்கும் நிலையில் இவர்கள் அதற்குள் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அடுத்த மாதம் இவர்கள் பூமி திரும்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

google news