போயிங் விமானத்தில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க வீரர் புட்ச் வில்மோர் 50 நாட்களாக சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் பூமிக்கு திரும்ப இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம். இதற்கு விண்வெளி வீரர்கள் அடிக்கடி சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் போயிங் விண்கலம் மூலம் இந்திய வம்சாவடி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.
போயிங் நிறுவனம் இதற்காக ஸ்டார் லைனர் என்னும் விண்கலத்தினை உருவாக்கியது. இதில் ஜூன் 5ந் தேதி இருவரும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்றனர். இரண்டு நாட்கள் பயணம் செய்து ஜூன் 7ந் தேதி சென்றனர். ஒரு வாரம் கழித்து ஜூன் 13ந் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்தது.
ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரிசெய்யப்படாமல் இருப்பதால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாதமும் அவர்கள் திரும்ப முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் நாடு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் ஷிப் விண்வெளி வீரர்கள் சிலரை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து வர இருக்கும் நிலையில் இவர்கள் அதற்குள் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அடுத்த மாதம் இவர்கள் பூமி திரும்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…