ஸ்மார்ட்போனை உருவாக்குவதை விட அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெரும் முயற்சியும், அதீத கவனத்தையும் செலுத்தி வருகின்றன. எல்லாவற்றிலும் விளம்பரம் என்ற காலக்கட்டத்தில் டெக்னோ நிறுவனம் தனது புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போனினை விளம்பரப்படுத்த பல எல்லைகளை கடந்துவிட்டது.
டெக்னோ நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் உடன் கூட்டணி அமைத்து ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போனினை விமானத்தில் விளம்பரப்படுத்த துவங்கிவிட்டது. இரு நிறுவனங்கள் இடையேயான கூட்டணியை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி மாடலின் படங்கள் மற்றும் பிராண்டு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்காக “Beyond the Extraordinary” பெயரில் விளம்பர திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. டெக்னோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் இடையேயான கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் மிட்-ரேஞ்ச் மற்றும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்பனை செய்துவந்த டெக்னோ, பிரீமியம் பிரிவிலும் போட்டியிட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தலைசிறந்த சாதனங்களை உருவாக்க வேண்டும் என்ற டெக்னோ பிராண்டின் குறிக்கோளை உறுதிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் டெக்னோ பிராண்டை பலத்தரப்பட்ட மக்களிடையே கொண்டுசேர்க்க முடியும். இதற்காக ஸ்பைஸ்ஜெட் விமானம் முழுவதுமாக ஃபேண்டம் நிறங்கள் மற்றும் ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் விமானத்தினுள் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட் கவர்களிலும் ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி பிராண்டிங் உள்ளது.
இதுதவிர ஸ்பைஸ்ஜெட் விமான பணிப்பெண்கள் புதிய ஃபேண்டம் வி ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய செயல் விளக்கங்களை பயணிகளுக்கு வழங்குவர். இவ்வாறு செய்யும் போது விளம்பரத்தை தாண்டி மக்களிடையே தனிப்பட்ட முறையில் பிராண்டை கொண்டுசேர்க்க முடியும். பறக்கும் ஊர்தியில் விளம்பரம் செய்வதன் மூலம் மக்களிடையே சாதனத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று டெக்னோ பிராண்டு நம்புகிறது.
நேற்று (மே 3) துவங்கிய இந்த விளம்பர பணிகள் ஆகஸ்ட் 2, 2023 வரை நடைபெற இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஃபேண்டம் வி ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போனிற்காக விளம்பரம் செய்வதற்கான கூட்டணி மகிழ்ச்சியளிப்பதோடு, சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். டெக்னோ ஃபேண்டம் பிராண்டட் ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 மேக்ஸ் விமானம் உள்நாடு மற்றும் சர்வதேச பயணங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…