latest news
டெலிகிராம் பயன்படுத்தும் நபரா நீங்க… அப்போ இந்த மெசேஜ் வந்தால் உஷாரா இருங்க!..
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எதை தொட்டாலும் பிரச்னை தான். ஒருத்தருடைய பணத்தினை பிடுங்க வித்தியாசம் வித்தியாசமாக ஐடியா செய்து பிடிங்கும் கும்பலின் அட்டகாசங்களும் எக்கசக்கம் தான்.
சில காலமாக மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் தெரியாத எண்களில் இருந்து ஒரு மெசேஜ் வரும். அதாவது சுற்றி இருக்கும் ஹோட்டல்கள் குறித்தோ, பிரபல இடங்கள் குறித்தோ ரிவ்யூ செய்தால் குறிப்பிட்ட தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டிருப்பார்கள்.
பார்க்கும் போது எளிதாக தெரியும் இதில் பெரிய பிரச்சினை இருக்கிறது. ஐந்தாறு இடங்களுக்கு ரிவ்யூ செய்தால் 150 முதல் 250 வரை பணம் கிடைக்கும். இதில் என்ன பிரச்சனை இருந்து விடப் போகிறது என நீங்கள் நினைத்தால் இதை கேளுங்கள். பொதுவாக இந்த மாதிரி மோசடி செய்பவர்கள் உங்களுக்கு முதலில் ஒரு சின்ன தொகையை கொடுத்து உங்களிடமிருந்து பெரிய தொகையை பிடுங்கி செல்வது தான் வழக்கம்.
சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த நபர் ஒருவருக்கு இதை போன்ற மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. ரிவ்யூ செய்து சம்பாதிக்கலாம் என்று ஆசையில் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அவர்களிடம் பேச வீசிய வலையில் சரியாக சிக்கி 55 லட்சத்தை இழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனே கிரைம் பிரான்ச் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க, அது குறித்து விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதில் குஜராத்தை சேர்ந்த ஜேய் சவாலியா, மிலப் தாக்கர் உள்ளிட்டவர் தான் இந்த மோசடிக்கு பின்னால் உள்ளனர் என்பதை கண்டறிந்தனர். இதை அடுத்து காவல்துறை குஜராத்துக்கு விரைந்து அவர்களை கைது செய்து அழைத்து வந்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.