Connect with us

latest news

சரியான டைம பயன்படுத்தி கொண்ட Threads..இந்த விஷயங்களுக்கெல்லாம் இங்க அனுமதி இல்லப்பா..

Published

on

threads conflict

உலகளவில் இன்று அனைவரும் பேசக்கூடிய ஒரு எலன்மாஸ்க் மற்றும் மார்க்கின் சர்ச்சைதான். இதற்கு காரணம் ஜுலை 6 ஆம் தேதி வெளிவந்த Threads செயலியின் ஆதிக்கம்தான். இந்த செயலியானது வெளிவந்த ஒரு நாளிலையே பல மில்லியன் பயனர்களை பெற்றது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது ஏற்கனவே சமூக வலைதளமாக இருந்த ட்விட்டருக்கு கடும் போட்டியை கொடுத்தது.

threads app

threads app

ஏனென்றால் இதன் செயல்பாடுகள் பெரும்பாலும் ட்விட்டரை ஒட்டியே இருந்தன. மேலும் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் தங்களது செயலியை உபயோகிப்பவர்களுக்கு கடும் விதிமுறைகளை விதித்தது. இதன்படி அதிகாரபூர்வமாக ட்விட்டர் கணக்கு இல்லாதவர்கள் ட்விட்டரில் போஸ்ட்களை பார்க்கும் லிமிட்டினை குறைத்தது. இதனால் அதன் மீது அதிருப்தியில் இருந்த பயனர்கள் அதற்கு மாற்றாக வேறு தளத்திற்காக எதிர்பார்த்திருந்தனர். அப்படிப்பட்ட நேரத்தில்தான் மார்க்கின் Threads செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

Threads CEO adam mosseri

Threads CEO adam mosseri

இதனை பற்றி Threads CEOஆன ஆடம் மோசேரி கூறுகையில், Threads செயலியானது ட்விட்டரை ஒடுக்குவதற்காக உருவாக்கப்படவில்லை எனவும் மேலும் இந்த செயலியில் மக்கள் மிக சிறந்த முறையில் பொழுதுபோக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனை less-aggressive தளமாகவும் கூறியுள்ளார்.

மேலும் மெட்டா நிறுவனம் அனைவருக்கு இனைமையான தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையே குறிகோளாக கொண்டுள்ளதாகவும்  இது எந்த விதத்திலும் ட்விட்டரின் வளர்ச்சியை பாதிக்க கூடிய எந்த செயலையும் செய்யவில்லை எனவும் அதன் CEO கூறியுள்ளார். மேலும் மக்களின் மனநிலைமையை பாதிக்க கூடிய எந்தவித அரசியல் குறித்த செய்திகளையும் இது வெளிவிடாது எனவும் மக்களுக்கு நன்மை தரகூடிய தகவல்களை மட்டும் தருவதே இதன் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

google news