Connect with us

tech news

ஆப்பிள் வாட்ச்-ஐ iPod-ஆ மாத்தலாம்.. சூப்பர் கேட்ஜெட் அறிமுகம்

Published

on

ஆப்பிள் சாதனங்களில் இணைத்து பயன்படுத்தக்கூடிய புதிய டைனிபாட் (TinyPod) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆப்பிள் வாட்ச் மாடலின் கேஸ் ஆகும். இதை ஆப்பிள் வாட்ச் உடன் இணைத்து பயன்படுத்தலாம். டைனிபாட் கொண்டு ஆப்பிள் வாட்ச் சாதனத்தை ஐபாட் (iPod) போன்ற சாதனமாக மாற்றி பயன்படுத்தலாம்.

சாதனத்தை பயன்படுத்தும் அனுபவத்தை எளிமையாக்கும் டைனிபாட் சுழலும் சக்கரம் (Scroll Wheel) ஒன்றை கொண்டிருக்கிறது. இதே சாதனம் சுழலும் சக்கரம் இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. டைனிபாட் லைட் என இந்த வேரியண்ட் அழைக்கப்படுகிறது.

டைனிபாட் சாதனத்தில் ஸ்கிரால் உள்ளது. இது ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ள சுழலும் கிரவுண் உடன் இணைந்துக் கொள்ளும். பிறகு, டைனிபாட் சாதனத்தின் ஸ்கிரால்-ஐ இயக்கினால் ஆப்பிள் வாட்ச்-ஐ பயன்படுத்தலாம். டைனிபாட் வடிவம் செவ்வகமாக ஐபாட் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதனால், இந்த சாதனத்தை ஆப்பிள் வாட்ச் உடன் இணைத்து பயன்படுத்தும் போது, ஐபாட் பயன்படுத்தும் அனுபவம் கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் செல்லுலார் வேரியண்ட் வைத்திருப்போர், டைனிபாட் மூலம் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இத்துடன் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்புவது போன்ற அம்சங்களை இயக்கலாம்.

டைனிபாட் சாதனம் ஸ்டான்டர்டு மற்றும் லைட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு மாடல் விலை 79.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6,700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலுக்கு ஏற்ற டைனிபாட் கேஸ் விலை 89.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டைனிபாட் லைட் மாடலின் ஆப்பிள் வாட்ச் கேஸ் விலை 29.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,500 என்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலுக்கான டைனிபாட் லைட் கேஸ் விலை 39.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3,300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக இந்த சாதனம் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *