tech news
உங்க மொபைல் ஹேக் ஆயிடுச்சா… இந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாதீங்க!
மொபைல் போன் இல்லாத ஒருநாளை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேநேரம், மொபைலை ஹேக் செய்து பெர்சனல் தகவல்களைத் திருடுவது, அதன்மூலம் பண மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பேட்டரி சார்ஜ்
வழக்கத்துக்கு மாறாக உங்கள் மொபைல் போன் பேட்டரி சார்ஜ் வெகுசீக்கிரமாகவே குறைந்துகொண்டே வரும். இவ்வாறு நிகழ்ந்தால் பேக்ரவுண்டில் ஏதோ ஒரு ஆப், தேவையில்லாமல் சார்ஜை தின்றுகொண்டிருக்கிறது என்று பொருள்
ஓவர் ஹீட்
அதிகப்படியான பயன்பாடு காரணமாக போன் சில நேரங்களில் ஹீட் ஆகலாம். ஆனால், தொடர்ச்சியாக ஓவர் ஹீட் ஆகிக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு ஸ்பைவேர் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உங்கள் போன் உள்ளாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
டேட்டா பயன்பாடு
திடீரென உங்கள் போனில் டேட்டா பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கினால், தேர்டு பார்ட்டி ஆப் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்களைப் பற்றிய தகவல்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பொருள்.
வித்தியாசமான செயல்பாடு
நீங்கள் எதுவும் செய்யாமலேயே திடீரென சில ஆப்கள் ஓப்பன் ஆவது, நீங்கள் அனுப்பாமலேயே டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது அல்லது போன் செய்வது போன்றவற்றைப் பார்த்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம்.
பாப் -அப் விளம்பரங்கள்
போனில் பிரவுஸரை நீங்கள் பயன்படுத்தாத சமயங்களிலும் திடீர் திடீரென பாப்-அப் விளம்பரங்கள் தோன்றுவதும் உங்கள் மொபைல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டும் அறிகுறிதான்.
தேவையில்லாத ஆப்-கள்
நீங்கள் டவுன்லோட் செய்யாத சில ஆப்-கள் உங்கள் போனில் தென்பட்டால் உடனே எச்சரிக்கையாகிக் கொள்ளுங்கள்..
இப்படியான சமயங்களில் உடனடியாக டேட்டாவை ஆஃப் செய்து, ஏரோபிளேன் மோடை ஆன் செய்யுங்கள். உடனடியாக போனை ரீசெட் செய்வதும், உங்கள் சிம்கார்டு ஆபரேட்டரிடம் புகார் செய்தும் இதிலிருந்து மீளலாம்.