latest news
எலான் மஸ்க்-இன் டுவீட்டெக் 2.0 – எப்படி பார்த்தாலும் எலான் ‘பிசினஸ் சக்சஸ்’ தான்..!
டுவிட்டர் நிறுவனம் முற்றிலும் புதிய டுவீட்டெக் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்திய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த சேவை அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக இந்த செயிலின் மேக் வெர்ஷன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் வழங்குவதற்காக டுவீட்-டெக் சேவையின் புதிய வெப் செயலி உருவாக்கப்பட்டு வருவதாக டுவிட்டர் தெரிவித்து இருந்தது.
தற்போதைய அறிவிப்பின் படி டுவீட்-டெக் சேவை 30 நாட்களில் வெரிஃபைடு-ஒன்லி அம்சமாக மாறும். அதன்பிறகு டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். இதுதவிர எலான் மஸ்க் இந்த சேவையில் மேலும் சில மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறார். அதன் படி பயனர்கள் லாக்-இன் செய்தால் மட்டுமே டுவிட்களை பார்க்க முடியும். இதோடு நாள் ஒன்றுக்கு இத்தனை டுவிட்களை தான் பார்க்க முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
டுவீட்-டெக் பிரீவியூ :
புதிய டுவீட்-டெக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், செயலியினுள் தற்போதும், ‘டுவீட்-டெக் பிரீவியூ’ (tweetdeck preview) என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டுவீட்-டெக் சேவையில் வழக்கம் போல வெளிப்படையான டிரான்சிஷன், சேவ்டு சர்ச், லிஸ்ட் மற்றும் காலம் உள்ளிட்டவை அப்படியே செயல்படுகிறது. மேம்பட்ட பிரீவியூ பில்டு டுவிட்டர் ஸ்பேசஸ், போல்ஸ் மற்றும் ஏற்கனவே வழங்கப்படாமல் இருந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. எனினம், இதில் டீம்ஸ் மட்டும் இதுவரை சேர்க்கப்படவில்லை.
பழைய டுவீட்-டெக் சேவை நிறுத்தப்படும் என்று டுவிட்டர் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், டுவிட்டர் ஊழியர் இந்த மாற்றம் நிரந்தரமானது என்று தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், பயனர்கள் அனைவரும் புதிய பிரீவியூ வெர்ஷனுக்கு மாற்றப்படுவர்.
கால அவகாசம் :
டுவிட்டர் சப்போர்ட் வழங்கி இருக்கும் தகவல்களின் படி, டுவீட்-டெக் சேவை விரைவில் டுவிட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்யேக சேவையாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 30 நாட்களுக்கு பிறகு டுவீட்-டெக் சேவையை பயன்படுத்த, பயனர்கள் வெரிஃபைடு பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
புதிய மாற்றத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால், ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அனைத்து பயனர்களும் டுவீட்-டெக் சேவையை பயன்படுத்த வெரிஃபைடு பெற வலியுறுத்தப்படுவர் என்று தெரிகிறது.