Connect with us

latest news

எலான் மஸ்க் பார்த்த வேலை..! சட்டென கல்லாகட்டிய புளூஸ்கை, மாஸ்டோடான் – என்ன ஆச்சு தெரியுமா..?

Published

on

Elon-Twitter-Featured-Img

டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கும் எலான் மஸ்க், சமூக வலைதளத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர் விலைக்கு வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை கண்ட டுவிட்டர், சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டது.

 

அதன்படி பயனர்கள் நாள் ஒன்றுக்கு இத்தனை பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். முதல் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் எத்தனை பதிவுகளை பார்க்க முடியும் என்ற எண்ணிக்கையை எலான் மஸ்க் தாராள மனசு படைத்தவராக உயர்த்தினார்.

தற்போதைய அறிவிப்பின் படி, வெரிஃபைடு அக்கவுன்ட் வைத்திருப்போர் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு பெறாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகள் வரை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Bluesky-

Bluesky-

டுவிட்டரின் இந்த அறிவிப்புக்கு உலகளவில் பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களும் டுவிட்டரின் சமீபத்திய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் கோபத்திற்கு ஆளாகி இருப்பதை தொடர்ந்து டுவிட்டருக்கு போட்டியாக செயல்பட்டு வரும் புளூஸ்கை சேவையில் சைன்-அப் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முடங்கிய புளூஸ்கை :

ஒரே சமயத்தில் ஏராளமானோர் சைன்-அப் செய்ய முயன்றதால், புளூஸ்கை தளத்தில் சைன்-அப் செய்வதற்கான வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் தங்களது குழுவினர் தளத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு வருவதாக புளூஸ்கை தெரிவித்து இருக்கிறது.

Bluesky-Pic-1

Bluesky-Pic-1

எங்களின் பீட்டா சேவையில் புதிய பயனர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் புளூஸ்கை தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. புளூஸ்கை தளத்தை டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி துவங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியில் மாஸ்டோடான் :

Mastodon

Mastodon

டுவிட்டர் தளத்தின் மற்றொரு போட்டியாளராக விளங்கும் மாஸ்டோடான் தளத்திற்கும் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. டுவிட்டர் அறிவிப்பு வெளியான குறுகிய காலக்கட்டத்தில் மாஸ்டோடான் தளத்தில் இணைய சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சைன்-அப் செய்துள்ளனர்.

Mastodon-Pic

Mastodon-Pic

தகவல் திருட்டு மற்றும் பாட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் ஏ.ஐ. பாட்கள் தகவல்களை திருடுவதாக நீண்ட காலமாகவே எலான் மஸ்க் குற்றம்சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாகவே எலான் மஸ்க் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

google news