latest news
எதுவுமே சொல்லல.. சத்தமின்றி வேலையை பார்த்த எலான் மஸ்க்.. கடுப்பான டுவிட்டர் Users..!
டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் ட்விட்களை பார்ப்பதற்கு தங்களின் அக்கவுன்ட்களில் சைன்-இன் (sign-in) செய்திருப்பது அவசியம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. முன்னதாக யார் வேண்டுமானாலும் ட்விட்களை பார்க்க முடியும் என்ற வசதி வழங்கப்பட்டு இருந்தது. புதிய மாற்றம் குறித்து டுவிட்டர் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக புதிய மாற்றம் குறித்து டுவிட்டர் பயனர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் இந்த மாற்றம், ஏதேனும் பிழை காரணமாக தவறுதலாக ஏற்பட்டு இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், இதன் மூலம் அதிக பயனர்களை டுவிட்டர் தளத்தில் சைன்-இன் செய்ய வைக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
காரணம் :
டுவிட்டர் நிறுவனம் தனது பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிய மாற்றம் மூலம் தனி நபர்களையும் டுவிட்டர் பயனர்களாக மாற்ற முடியும் என்ற இந்த காரணத்துக்காக செய்யப்பட்டு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கை டுவிட்டர் தளத்திற்கு எதிர்பாராத தீமைகளை செய்யவும் வாய்ப்புகள் உண்டு. ட்விட்களை பொது வெளியில் பார்க்க முடியாது என்பதால், இவை சர்ச் என்ஜின்களின் தேடலிலும் இடம்பெறாது. இதன் காரணமாக கூகுள் தேடல் மூலம் கிடைக்கும் பயனர் எண்ணிக்கை ஒட்டமொத்தமாக சரிந்துவிடும்.
எலான் மஸ்க் ஆதங்கம் :
மேலும் நீண்ட காலமாக தகவல்களை பெறுவதற்காகவே டுவிட்டர் வந்து செல்லும் பயனர்களுக்கு இந்த நடவடிக்கை வேதனையை அளிக்கும். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ஏ.ஐ. டூல்கள் டுவிட்டர் தேடல்களை மேற்கொண்டு வருவது குறித்து கவலை தெரிவித்து இருந்தார். இதன் மூலம் டுவிட்டர் தரவுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
தற்போது டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புதிய மாற்றத்திற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் இல்லை. டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய எலான் மஸ்க், இந்த பொறுப்பை லின்டா யக்கரினோவுக்கு வழங்கி இருக்கிறார். இவர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதில் இருந்து, தளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.