Connect with us

latest news

வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்

Published

on

ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசு துவங்கி, செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்று உத்யோகினி. இந்த திட்டம் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ. 3,00,000 வரையிலான கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைக்கு பெண்கள் வட்டி ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கடன் தொகையை அதிகபட்சம் 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானவர்கள் யார் யார்?

  • உத்யோகினி திட்டத்தில் பயன்பெறுபவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • கடன் பெறும் பெண்ணின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 1,50,000 மற்றும் அதைவிட குறைவாக இருக்க வேண்டும். விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் விலக்கு உள்ளது.
  • கடன் பெறும் பெண்ணின் வயது 18 முதல் 55 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • உத்யோகினி திட்டத்தில் கடன் பெறுவோர் அதற்கு முன் நிதி நிறுவன கடன் பாக்கி வைத்திருத்தல், கடன் செலுத்த தவறி இருத்தல் கூடாது.

உத்யோகினி திட்டத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் துணை இயக்குநர் / CDPO அலுவலகங்கள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அருகாமையில் உள்ள வங்கியில் சமர்பிக்க வேண்டும். இனி விண்ணப்பம், ஆவணங்கள் சரியாக இருப்பின் குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் வழங்கும் நடைமுறை துவங்கப்படும்.

கடன் கோரும் பெண் சமர்பிக்கும் விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை வங்கி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். ஒருவேளை அனைத்தும் சரியாக இருப்பின், கடன் வழங்க நிதி ஒதுக்குமாறு வங்கி சார்பில் கார்ப்பரேஷனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் தொகை விடுவிக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிற்கே நேரடியாக கடன் தொகை செலுத்தப்பட்டு விடும். இதை கொண்டு விண்ணப்பதாரர் வியாபாரத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *