Connect with us

tech news

தொலைந்து போன மொபைல் போனை நிமிடங்களில் டிராக் செய்யலாம் – எப்படி தெரியுமா?

Published

on

ஸ்மார்ட்போன்கள் இந்த காலத்தில் இன்றியமையாத சாதனமாக, நம்மில் ஒன்றாக மாறிவிட்டது. மொபைல் இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அடிப்படை தகவல் பரிமாற்றம் துவங்கி, பொழுதுபோக்கு, பணப்பரிமாற்றம், கேமிங் என மனிதனின் அன்றாட வாழ்க்கையை சீராக நடத்துவதில் இன்றைய மொபைல் போன்கள் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

தனிப்பட்ட தகவல்கள் துவங்கி, நினைவுகளை நிழற்படமாக வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் என ஒருவரின் அத்தியாவசியம் துவங்கி அந்தரங்கம் வரை எல்லாமே மொபைல் போன்களில் தான் உள்ளன.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மொபைல் போன்கள் தொலைந்து போனால் நம் மனநிலை எப்படி மாறும்? அது எத்தனை மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்று யாராலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அப்படி உங்களது மொபைல் போன் காணாமல் போனாலோ அல்லது தொலைந்து போனாலோ அதை நினைத்து வருந்துவதை தவிர்த்து அதனை கண்டுபிடிக்க என்ன செய்யலாம் என்று தொடர்ந்து பார்ப்போம்.

காணாமல் போன ஆண்ட்ராய்டு சாதனத்தை கண்டுபிடிக்க கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் சேவையை பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் பிளே ஸ்டோரில் இருந்து Find My Device App-ஐ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பிளே ஸ்டோர் தவிர்த்து மொபைல் பிரவுசரில் இருந்தும் தொலைந்த மொபைலை கண்டுபிடிக்க முடியும்.

இதற்கு பிரவுசரில் – google.com/android/find என்ற வலைதள முகவரி சென்று அதில் உள்ள Choose your device ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

இனி Get Directions ஆப்ஷனை க்ளிக் செய்தால், தொலைந்து போன சாதனம் எங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

செயலியை பயன்படுத்தி இதே ஆப்ஷன்களை இயக்கும் போது, Play Sound ஆப்ஷனில் சாதனத்தை ரிங் செய்ய வைப்பதன் மூலம் அது எங்கு இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் சாதனத்தை கண்டறிய முடியாத நிலையில், அதில் உள்ள தகவல்களை பாதுகாக்க சாதனத்தை லாக் செய்யலாம். இதற்கு Lock Device ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

 

google news