வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி தனது பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி பலன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
பயனர்களுக்கு வழங்கப்படும் தினசரி டேட்டா தவிர, கூடுதலாக 30GB முதல் 50GB வரை அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அரையாண்டு சலுகையை தேர்வு செய்வோர் கூடுதல் டேட்டா அதிகபட்சம் 45 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வருடாந்திர சலுகையை தேர்வு செய்வோர் கூடுதல் டேட்டாவை அதிகபட்சம் 90 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சுதந்திர தின சலுகையின் படி வி நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ என ஓடிடி சேவைக்கான ஒருவருட சந்தாவை எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி வழங்குகிறது.
பயனர்கள் வி ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் தள்ளுபடிகளையும் பெற முடியும். குறிப்பாக ரூ. 3,499, ரூ. 3699 மற்றும் ரூ. 3799 போன்ற ரீசார்ஜ்களை செய்யும் போது முறையே ரூ. 50, ரூ. 75 மற்றும் ரூ. 100 வரை தள்ளுபடி பெற முடியும்.
சிறப்பு சலுகைகள் தவிர ரீசார்ஜ் செய்வோருக்கு கிஃப்ட் கார்டு மற்றும் பிரான்டு வவுச்சர்களும் வழங்கப்படுகிறது. இதில் வி ஷாப் கிஃப்ட் கார்டுகள் மற்றும் 30-க்கும் அதிக பிரான்டு வவுச்சர்கள் அடங்கும். அதன்படி ஜொமாட்டோ தளத்தில் உணவு ஆர்டர்களுக்கு 4 சதவீதமும், பிவிஆர் டிக்கெட் முன்பதிவுகளுக்கு 10 சதவீதமும், பான்டலூன்ஸ் ஷாப்பிங்கில் 12 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் வி செயலியில் ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகைகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று வி அறிவித்து இருக்கிறது.
கூடுதல் டேட்டா விவரங்கள்:
ரூ. 1749 சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது 180 நாட்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தற்போது 30GB வரை கூடுதல் டேட்டா 45 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ. 3449 சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தற்போது 50GB வரை கூடுதல் டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ. 3624 சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 50GB வரை கூடுதல் டேட்டா (90 நாட்கள் வேலிடிட்டி) வழங்கப்படுகிறது.
ரூ. 3699 சலுகையில் ரீசார்ஜ் செய்யும் போது 365 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 50GB வரை கூடுதல் டேட்டா (90 நாட்கள் வேலிடிட்டி) வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…