Categories: latest newstech news

கேம் வடிவில் தயாரான விராட் கோலி – கவுதம் கம்பீர் மோதல்!

ஐபிஎல் 2023 கிரிகெட் தொடர் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடர்பின் விறுவிறுப்பான போட்டிகள் மட்டுமின்றி, போட்டிகளின் போது ஏற்படும் சம்பவங்களும் உடனே வைரல் ஆகி விடுகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் இருவரும் சண்டையிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது நடைபெற்றது. விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீரின் வாக்குவாதம் ஐபிஎல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. வைரல் சம்பவம் 2டி கிராஃபிக்ஸ் நுட்பத்தில் கேமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. யுனிடி கேம் எஞ்சின் மூலம் உருவாக்கப்பட்ட கேம் கிட்ஹப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Virat-Kohli-Gautam-Gambhir-IPL-fight-online-game

இதனை டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் விளையாட முடியும். எனினும், மொபைலில் விளையாடும் போது லோடு ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டு, பின் கிராஷ் ஆகிறது. இதனால் கேம் விளையாட விரும்புவோர் அதனை வலைதளத்தில் விளையாடலாம்.

விராட் கோலி – கவுதம் கம்பீர் கேம் விளையாடுவது எப்படி?

வலைதளம் சென்றதும், கேம் துவங்கிவிடும். பின் விராட் கோலி அல்லது கவுதம் கம்பீர் என்று இருவரில் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து முடித்ததும், கிரிகெட் மைதானத்தில் விராட் கோலிக்கு எதிராக கவுதம் கம்பீர் அல்லது கவுதம் கம்பீருக்கு எதிராக விராட் கோலி இருப்பது போன்ற காட்சிகள் திரையில் ஓடும். விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் அவரவர் அணி சீருடையில் மோதும் காட்சிகள் தொடர்கின்றன.

Virat-Kohli-Gautam-Gambhir-IPL-fight-online-game

இருவரது மோதலின் பின்னணியில் இரு அணி வீரர்களும் பயிற்சி செய்யும் காட்சிகளும் உள்ளன. இந்த கேம் முழுக்க முழுக்க இரு ஐபிஎல் அணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேம் முடிவில் பயனர் தேர்வு செய்யும் அணியின் வீரர் வெற்றியாளராக நிற்பார். அந்த வகையில் விராட் கோலியை தேர்வு செய்தால் கவுதம் கம்பீர் வீழ்த்தப்பட்டு இருப்பார்.

இந்த கேம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேம் உண்மை சம்பவத்தை தழுவி நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago